Header Ads

  • சற்று முன்

    திருவாடானையில் நோய்வாய்பட்ட நாய்களால் பொதுமக்கள் அவதி


    திருவாடானை தெருக்களில் சுற்றி திரியும் நோய்வாய்பட்ட நாய்களால் பொதுமக்கள் அவதி, நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர், ஊராட்சி நிர்வாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தாலுகாவில் மிகவும் முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க ஊராகும். அதனால் அடிக்கடி சுற்றுலா பயணிகள் வந்துசெல்லும் அளவிற்கு ஆயிரம் ஆண்டுகள் சிறப்புமிக்கு சிவன் கோவில் மற்றும் புன்னிய ஸ்தலங்கள் அதிகம் உள்ளது. தற்போது திருவாடானையில் நாய்கள் தொந்தரவு அதிகராத்துள்ளது. இரவு நேரங்களில் நாய்கள் ஊழையிடுவதால் தங்களது தூக்கம் கெடுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் திருவாடானை வீதிகளில் குறிப்பாக அஞ்சல் அலுவலகம் அருகில் மற்றும் வடக்கு தெரு, தெற்கு தெரு பகுதிகளில் ஒருவித நோய் பாதிக்கப்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றி திரிகிறது. இந்த நோய் தாக்கத்தால் நாய்களின் முடிகள் உதிர்ந்து சொறி சொறியாக காணப்படுகிறது. நாய்களை பார்த்தால் பயந்து ஓடும் அளவிற்கு உள்ளது. மேலும் இந்த நாய்கள் எப்பொழுதும் சொறிந்து கொண்டே இருப்பதால் இந்த நோய் மற்ற நாய்களுக்கு பரவுவதாகவும் இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இது குறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் எடுத்து கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வளர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad