Header Ads

  • சற்று முன்

    திருவாடானை ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உரம் அதிக விலைக்கு விற்பனை செய்தால் லைசன் ரத்து மாவட்ட இயக்குநர் அறிவிப்பு


    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உரம் விற்பனை செய்யும் தனியார் கடைகளை மற்றும் குடோன்களை ஆய்வு செய்த விவசாய துறை மாவட்ட இயக்குநர், உரம் விவசாயிகளுக்கு கூடுதலாக விற்பணை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடையின் உரிமம் ரத்த செய்வதோடு வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார். 

      ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் மாவட்ட விவசாயதுறை இயக்குநர் மற்றம் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் சேக்அப்துல்லா திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் உரம் விற்பனை செய்யும் தனியார் கடைகள் மற்றும் குடோன்களை நேரில் ஆய்வு செய்தார். விவசாய பணிகள் தற்பொழுது ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 4 வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் தற்பொழுது வரை போதுமான மழை பெற்துள்ளது. இந்நிலையில் விவசாயிகள் தங்கள் பயிர் செய்துள்ள நெற்பயிர்களுக்கு உரம் போடும் வேலையில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்நிலையில் உரம் அரசிடம் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது என்றும், தனியார் விற்பனையாளர்கள் உர மூடைகளில்  குறிப்பிட்டுள்ள அல்லது கடைமுன்பு வைக்கப்பட்டுள்ள விலைப் பட்டியலில் கண்ட விலைக்கு கூடுதலாக விற்பணை செய்யகூடாது. அதிக விலைக்கு உரம் விற்பதாக புகார் வந்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு வழக்கு பதிவு செய்ய நேரிடும் என்றும் விலைப் பட்டியல் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். உரம் வாங்க வரும் விவசாயிகள் கண்டிப்பாக ஆதார் அட்டை. கொண்டுவந்து உரம் வாங்கவும். அரசு உரத்திற்கு மானியம் வழங்குவதால் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை மூலம் உரம் வாங்கும் பட்சத்தில் சலுகைகள் கிடைக்கும் என்று தெரிவித்தார். மேலும் விவசாயிகள் உரங்களுடன் வேப்பம் புண்ணாக்கு கலந்து போட்டால் பிந்நாட்களில் பயிர்களில் நோய்தாக்குதல் குறையும், மேலும் உரங்களை தொடர்ந்து போதிய இடைவெளிவிட்டு போட்டால் நல்லது என்றும் தெரிவித்தார். திருவாடானை வேளாண்மை அலுவலர் கருப்பையா உடனிருந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad