Header Ads

  • சற்று முன்

    திருவாரூரில் அரசு பள்ளி ,கல்லூரி மற்றும் விடுதிகளின் சீர்கேட்டை கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


    பள்ளி, கல்லூரி விடுதிகளில் உள்ள நிர்வாக சீர்கேட்டை உடனடியாக சரிசெய்து நவீனப்படுத்தி தரம் உயர்த்திடக்கோரி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் 18-10-2019 இன்று மாலை திருவாரூரில் நடைபெற்றது.

    காலம் காலாமாக ஆட்சி மாறுகிறது. அதிகாரிகள் மாறுகிறார்கள். ஆனால் மாணவர்களின் விடுதிகளில் மட்டும் எந்த மாற்றமும் நிகழவில்லை. குடிநீர் பிரச்சினை, துர்நாற்றம் கொண்ட கழிப்பிடம், தரமற்ற, சத்தில்லா உணவு, பழுதடைந்த கட்டிடம், செடி, கொடிகள் படர்ந்த சுற்றுப்புறம், கொசுவை விரட்டா மின் விசிறி, அரைகுறை வெளிச்சம், அதனால் தொலைந்து போன தூக்கம், இப்படி என்னற்ற பிரச்சினைகளோடு கல்வி கற்கும் நிலைக்கு விடுதி மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  "நாம் தரையில் படுத்துறங்கினோம் நம் பிள்ளைகளாவது கட்டில் மெத்தையில் படுத்துறங்கட்டும்" என நம் பெற்றோர்கள் நம்மை வளர்த்துள்ளனர். அது போல நமது அடுத்த தலைமுறை மாணவர்களாவது நவீனப்படுத்தப்பட்ட விடுதியில் தங்கி கல்வி கற்றிடும் நிலைமை உருவாகிட வேண்டுமென்ற நோக்கோடு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் பெருமன்ற மாவட்டத் தலைவர் ஜெ.பி.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன், மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சு.பாலசுப்ரமணியன், மாவட்ட பொருளாளர் எம்.நல்லசுகம் இளைஞர் பெருமன்ற மாவட்டகுழு உறுப்பினர்கள் கோவி.அறிவழகன், க.ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மாணவர் பெருமன்ற மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சிவனேஷ், கல்லூரி நிர்வாகிகள் கே.இராகவன், ஆர் திலீப்ராஜ், ஆர்.இஸ்ரேல், என்.பிரவீன்குமார் உள்பட பலர்  கலந்து கொண்டனர்



    செய்தியாளர் : பாலா 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad