நாங்குநேரி இடைத் தேர்தலுக்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர் கங்காதரன் விஷம் குடித்து மரணம் !
தேனி மாவட்டம் தென்கரை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் கங்காதரன். இவர் மற்றும் 50 பேர் கொண்ட குழுவினர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற போது, சாத்தூர் வேனில் கங்காதரன் வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து உடன் இருந்தவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கங்காதரன் விஷம் அருந்தியது தெரிய வந்தது. பணி சுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சனையா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை