Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்


    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட கிளை தலைவர் ராஜ், தலைமையில் நடைபெற்றது. வட்ட கிளை செயலாளர் காமராஜ்,  பொருளாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில்  கடந்த மாதம் சேலத்தில் நடந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டி 50க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தமிழக அரசுக்கு  அரசு ஊழியர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் தமிழக அரசு செயல் படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 

    சத்துணவு ஊழியர்கள். அங்கன்வாடி ஊழியர்கள்.  கிராம பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அரசுத்துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அரசு செலவில் உயர் சிகிச்சை அளித்திட வழிவகை செய்ய வேண்டும். அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருபத்தொரு மாத பென்ஷன் தொகையை உடனடியாக வழங்க ஆவன செய்ய வேண்டும். தமிழக அரசு பிறப்பித்துள்ள 56 ஆயிரத்து செய்து காலியாக உள்ள அனைத்து இடங்களையும் நிரப்ப தமிழக அரசு வழிவகை செய்யும் செய்யவேண்டுமென மொத்தம்      10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    செய்தியாளர் : வேலூர் மாவட்டம் - நித்தியானந்தம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad