ஓசூர், அஞ்செட்டி அருகே, மருத்துவம் படிக்காமல் நீண்டநாட்களாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த 2 போலி மருத்துவர்கள் கைது
ஓசூர், அஞ்செட்டி அடுத்த நாட்றம்பாளையம் பகுதியில் போலி மருத்துவர்கள் இரண்டு பேர் கிளினிக் மூலமாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவக்குழு சார்பில் ஆய்வு மேற்க்கொண்டபோது நாட்றம்பாளையத்தில் தனித்தனியாக இரண்டு போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததை கண்டறியப்பட்டு அவர்களை போலிசார் உதவியுடன் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் விசாரணையில் இளங்கலை கணிதம் (Bsc maths) பயின்ற ஒகேனக்கல்லை சேர்ந்த சக்தி வேல்(40) மற்றும் சித்த மருத்துவம் பயின்ற பென்னாகரத்தை சேர்ந்த சிவக்குமார்( 39) ஆகிய இருவரும் மருத்துவமே படிக்காமல் 5 ஆண்டுகளாக இந்த பகுதியில் மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் அஞ்செட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு செய்தியாளர் : முருகன் சி.
கருத்துகள் இல்லை