திருவண்ணாமலை சேத்துப்பட்டு அருகே நம்பேடு கிராமம் அருகே லாரி சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதி விபத்து போராடி டிரைவர் உயிருடன் மீட்பு
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்த சேத்துப்பட்டு அருகே உள்ள நம்பேடு கிராமம் அருகே லாரி சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதிய விபத்தில் போராடி டிரைவர் உயிருடன் மீட்பு 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.
பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு கல்குவாரியிலிருந்து சேத்துப்பட்டு வழியாக கொம்மனந்தல் கிராமத்தில் நடைபெற்றுவரும் தார்சாலை பணிக்கு தார்ஜல்லி கலந்த கலவையை தனியார் கன்சக்க்ஷன் லாரி ஏற்றிக்கொண்டு நம்பேடு கிராமம் அருகே செல்லும்போது நிலைதடுமாறி லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சேதமடைந்த லாரியின் முன்பக்கம் மற்றும் மரத்திற்கும் இடையே சிக்கிய சபரிமலைக்கு மாலையணிந்திருந்த டிரைவர் ரவியை இரண்டு ஜேசிபி இயந்திரம் உதவியுடன் பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் 3 மணி நேரம் போராடி அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்டனர். உயிருடன் மீட்ட டிரைவர் இரவியை தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர.
இதனால் சேத்துப்பட்டு - போளூர் சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து சேத்துப்பட்டு காவல் நிலைய போலிசார் விசாரனை செய்து வருகிறார்கள். ஐயப்பன் சுவாமி அருளால்தான் இந்த பயங்கர விபத்தில் டிரைவர் உயிருடன் மீட்கப்பட்டதாக அங்கிருந்த பொதுமக்கள் பேசிக்கொண்டனர்.
செய்தியாளர் : திருவண்ணாமலை மூர்த்தி
கருத்துகள் இல்லை