ஆவடி நகராட்சிக்கு உட்பட டெங்கு கொசு புழு உற்பத்திக்குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு சுகாதாரத்துறை இணை இயக்குனர் பட்டாபிராமில் ஆய்வு , டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் இருந்த தனியார் பள்ளி, வணிக வளாகங்களிலும் வீடுகளிலும் தனியார் உணவகங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதி 48 வார்டுகள் கொண்டுள்ளது அப்பகுதியில் டெங்கு கொசு உற்பத்தி அதிகரித்திருப்பதாக புகார்கள் எழுந்தன.
இதனால், ஆவடி சுற்றுவட்டார பட்டாபிராம் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, டெங்கு கொசு உற்பத்திக்கு முகாந்திரம் உள்ள பகுதிகளின் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில், அமைந்துள்ள கக்கன்ஜி நகர் அரசு பள்ளியில் இன்று தமிழ்நாடு சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ், தலைமையில் திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஒட்டுமொத்த டெங்கு தடுப்பு ஆய்வு மேற்கொண்டனர். இதில், டெங்கு தடுப்பு பணியாளர்கள், 322பேர், மற்றும் ஆவடி மாநகராட்சி கணக்கெடுப்பாளர் 12 பேர் துப்புரவு தொழிலாளர் மேற்பார்வையாளர்12 இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று கொசுக்களை கொல்லக்கூடிய புகை அடிக்கும் இயந்திரம் 12 மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு சென்று புகை அடிக்கும் கனரக இயந்திரம் 6 மற்றும் நகராட்சி ஊழியர்களும் மருத்துவ குழுவினரும் ஆய்வு செய்தனர் வீட்டிற்குள் இருக்கும் பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இரண்டு வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் தெரிவிப்பதற்கு இரண்டு வாகனங்களில் சென்று வீடுகளில் ஆய்வு செய்தனர். டெங்கு கொசுப்புழு உருவாகும் தேங்காய் மட்டை பழைய டயர் தேங்காய் ஓடு ஆட்டங்கள் மற்றும் பழைய பிளாஸ்டிக் டப்பாக்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள்உடைந்த தண்ணீர் தொட்டி இவைகளெல்லாம் வீட்டில் தேவையற்றது க உள்ளதா எனவும் ஆய்வு செய்தனர் மற்றும் கக்கன்ஜி நகர் சாஸ்திரி நகர் பாபு நகர் உழைப்பால் நகர் அம்பேத்கர் நகர் காந்தி நகர் பகுதிகளில் மழைக் காலம் முடியும் வரை மருத்துவ குழுவினரும் அங்கு மருத்துவ முகாம் இருப்பதாகவும் தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில் Ho டாக்டர் ராஜேந்திரன் bmo மருத்துவர் பனிமலர் dmo சுமதி மற்றும் மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி சுகாதார அலுவலர் மோகன் பொறியாளர் வைத்தியலிங்கம் துணைப் பொறியாளர் சத்தியசீலன் மற்றும் சங்கர் சுகாதார ஆய்வாளர்கள் ஜாபர் ஏழாவது வார்டு பிரகாஷ் தண்டுறை பகுதி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் கலந்துகொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்
கருத்துகள் இல்லை