Header Ads

  • சற்று முன்

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் 3விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.


    திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டு கஜா புயல் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது இந்த நிலையில் 2018 -19 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகை 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் விடுபட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே பல்வேறு கட்சிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் ,சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என அறிவிப்பு வெளியிடப்பட்டு இன்று விளமல் பகுதியில் இருந்து பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்று முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.தொடர்ந்த செய்தியாளர் சந்தித்த சங்க ஒருங்கிணைப்பாளர் பிஆர் பாண்டியன் தெரிவித்ததாவது கணக்கெடுப்பு பணியின்போது தற்காலிக பணியாளர்களைப் பயன்படுத்தியதன் காரணமாகவே வெளியிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் காரணம் கூறப்படுவதாவது இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் மேலும் நேற்று இரவோடு இரவாக நெல்  கொள்முதல் செய்வதற்காக ஊக்கத் தொகை 50 ரூபாய் மட்டுமே உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்தார்.
    இந்தப் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்


    செய்தியாளர் : காரைக்குடி - சண்முக சுந்தரம்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad