• சற்று முன்

    திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்பா ட்டம் நடை பெற்றது


    திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய வட்ட தலைநகர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ள நிலுவை கோரிக்கைகளை வலியுறுத்தி உலக முதியோர் தினமான இன்று தமிழகம் முழுவதும் வட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின்போது அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளாவன,ஓய்வு பெறும் நாளில் அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக தற்காலிக பணி நீக்கம் செய்வது கைவிட வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், அரசாணை எண் 56ஐ ரத்து செய்து அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், 21 மாத நிலுவைத் தொகை மற்றும் ஒரு மாதத் தொகையை போனசாக வழங்கப்பட வேண்டும் , என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad