Header Ads

  • சற்று முன்

    அரணி அருகே ஆலை அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் மற்றும் 5 லட்சம் ரூபாய் கொள்ளை


    ஆரணியில் அரிசி ஆலை அதிபர் வீட்டின் பூட்டை  உடைத்து 80 சவரன் தங்க நகைகள் மற்றும் 5 இலட்சம் ரொக்கம் கொள்ளை மற்றும்  2கோவில்களின் பூட்டு உடைத்து உண்டியலில் 20000 கொள்ளை ஒரே நாளில் திருடுபோன சம்பவத்தால் ஆரணியில் பெரும் பரபரப்பு. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இ.பி. நகர் ஏ.சி.எஸ். கார்டன் பகுதியில் தனது குடும்பத்துடன் வசிப்பவர் ஆனந்தன் மகன் அருண்குமார்.  இவர் அரிசி ஆலை உரிமையாளர் ஆவார்.  நேற்று சனிக்கிழமை வீட்டில் சாமி கும்பிட்டுவிட்டு மாலை அருண்குமார் அரிசிஆலைக்கு சென்றுவிட்டார்.அவரது குடும்பத்தினர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு ஆரணியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இதனையறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 80 சவரன் தங்கநகைகள் மற்றும் 5 இலட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவலறிந்த ஆரணி கிராமிய காவல் நிலைய போலிசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அருண்குமார்  என்பவரின் வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்து மற்றும் திருவண்ணாமலை கைரேகை நிபுனர் டிஎஸ்பி சுந்தர்ராஜன் ஆகியோரை வரவழைத்து தடயங்களை சேகரித்து கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.



    செய்தியாளர் :: T. V.மூர்த்தி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad