தனியார் பைனான்சில வாங்கிய 80 லட்சம் கடனால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமுல்லைவாயில் சிவசக்தி நகர் 24வது தெருவில் வசித்து வருபவர் கோவிந்தசாமி இவரது மனைவி சுப்பம்மாள் மற்றும் இரண்டு மகன்கள் நாகராஜ், ரவி ,மற்றும் மகள் கல்யாணி உடன் வசித்து வருகிறார். இவர் 10 பேரை வைத்து சாலை போடும் பணி மற்றும் வீடு கட்டும் காண்ட்ராக்டர் ஆவார். இந்நிலையில் கோவிந்தசாமி மகள் கல்யாணியை பார்க்க அவரது கணவர் ஆறுமுகம் மாலை 4 மணிக்கு மாமனார் வீட்டுக்கு வந்தபோது குடும்பத்தில் உள்ள அனைவரும் வாயில் நுரை தள்ளியபடி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம்.சம்பவ இடத்திற்கு தனது மனைவியை பார்க்க மாமியார் வீட்டுக்கு வந்த போது மனைவியை கல்யாணி குழந்தைகள் சர்வேஸ்வரி (8) ,யோகபிரியா(6) ஆகியோர் வாயில் நுரை தள்ளி ஆபத்தான நிலையில் மீட்டு ஆட்டோ வில் ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று உள்ளார்.
பின்னர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மீதமுள்ள நால்வரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற் கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். கோவிந்தராஜ் வீட்டின் பத்திரத்தை வைத்து வாங்கிய 80 லட்சம் கடனும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் வாங்கிய கடனை அவரால் திருப்பிக் கொடுக்க முடியாததால் வேறுவழியின்றி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக அறுமுகம் காவல் துறையினரிடம் தெரிவித்தார். ஆறுமுகம் மனைவி கல்யாணி குழந்தைகள் சர்வேஸ்வரி (8) , யோகபிரியா(6) ஆகியோர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இச்சம்பவத்தில் கோவிந்தசாமி, மனைவி சுப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகியோர் சம்பவ் இடத்திலேயே உயிரிழத்தனர்.
இது குறித்து திருமுல்லைவாயில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .
செய்தியாளர் :: B. V.ராஜன்
கருத்துகள் இல்லை