• சற்று முன்

    ஆவடி அருகே கார் கட்டுபாட்டையிழந்து விபத்து ஏற்பட்டது - விபத்தில் அதிர்ஷ்வசமாக உயிர் தப்பினார்


    ஆவடி அருகே பட்டாலியன் காவல் பயிற்சி மைதானம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து குறுக்கே இருந்த சுவரில் மோதியதில் ஐடி ஊழியர் தலையில் அடிபட்டு பலத்த காயம் ஆவடி அடுத்த வசந்த் நகரை சேர்ந்த ஐடி ஊழியர் ஸ்ரீதர் இன்று மாலை அயனாவரத்தில் இருந்து தனது கார் மூலம் ஆவடியில் உள்ள வீட்டிற்கு வரும்பொழுது திருமுல்லைவாயில் அடுத்த காவல்துறை பயிற்சி மைதானம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து குறுக்கே இருந்த சுவரில் மோதியது 

    அந்த காரில் பயணம் செய்த 3 பேர் கார் ஓட்டிய ஸ்ரீதர் மட்டும் தலை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருடன் காரில் பயணம் செய்த இருவர் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு காயம் இல்லாமல் உயிர் தப்பினர் தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் விபத்தில் அடிபட்டவர் உடனடியாக அவசர ஊர்தி 108 வரவழைக்கப்பட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த விபத்தில் அம்பத்தூரில் இருந்து ஆவடி செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது



    செய்தியாளர் : திருவள்ளுர் - போஜ ராஜன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad