• சற்று முன்

    கோவில்பட்டி அருகே குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழை நீர் - 120 குடும்பங்கள் வெளியே செல்ல முடியாமல் தவிப்பு


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதி திருமலை நகர். இப்பகுதியில் சுமார் 120 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில தினங்களாக கோவில்பட்டி பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது இந்த மழையின் காரணமாக திருமலை நகரில் குடியிருப்புகளை சுற்றி மழை நீர் தேங்கி உள்ளது. கடந்த இரண்டு தினங்களாக அதிக அளவில் மழை பெய்து வருவதால் இப்பகுதியில் மழை நீர் அதிகமாக வருகிறது. மேலும் அருகிலுள்ள குறிஞ்சாங்குளம் கண்ணமாய் பகுதியிலிருந்தும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் திருமலை நகர் பகுதியில் மழைநீர் தேங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த மழை நீருடன் மற்ற பகுதியிலிருந்து கழிவுநீரும் வெளியேற்றப்படுவதால் இங்கும் தேங்கி நிற்கும் மழை நீரால் துர்நாற்றம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக தொடர் மழை பெய்தால் இதுபோன்று மழைநீர் தயங்குவதாக புகார் அளித்து இருந்தோம் ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தற்போது மழை நீர் தேங்கி இரண்டு நாட்களாக விட்டுவிட்டு வெளியேற முடியாத சூழல் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். பால் ,காய்கறிகள் சமையல் பொருட்கள் கூட வாங்க முடியாத சூழல் இருப்பதாகவும், இருக்கின்ற பொருட்களை வைத்து சமைத்து சாப்பிட்டு வருவதாகவும் தொடர்ந்து மழை பெய்தால் தங்களால் வெளியேறி முடியாத சூழ்நிலை ஏற்படும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். திருமலை நகர் பகுதியில் இருப்பவர்கள் மட்டுமே தேங்கி நிற்கும் மழை நீரில் நடந்து செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது. உள்பகுதியில் இருப்பார்கள் முற்றிலுமாக வெளியேற முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இதுகுறித்து ஊராட்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு தகவல் கொடுத்தும் கடந்த இரண்டு நாட்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இன்று காலையில் மட்டும் கிராம நிர்வாக அதிகாரி பார்வையிட்டுச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததாகவும் ஆனால் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மழைநீர் தேங்கி நின்று கடமையாக துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய்கள் பரவும் நிலை உருவாகி இருப்பதாகவும் எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு எடுக்க வேண்டும் .மேலும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad