ஓசூர் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து அரசு பேருந்தில் பயணம் செய்த 3 பேர் பலி 32 பேர் படுகாயம்
ஓசூர் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் சாம்பல்பள்ளம் என்னும் பகுதியில் அரசு பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில், அரசு பேருந்தில் பயணம் செய்த 3 பேர் பலி 32 பேர் படுகாயம் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்ப்பு
திருவண்ணாமலையிலிருந்து ஓசூருக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந் நிலையில் .சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்ற பகுதியில் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில்* பேருந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த லாரியும் அரசு பேருந்து நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் அரசு பேருந்தின் டிரைவர் உல்ப்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .நான்கு பயணிகள் பலத்த காயமடைந்தனர். மேலும் 26 ஆண் பயணிகளும் மற்றும் 6 பெண் பயணிகருடன் மொத்தம் 32 பயணிகள் காயமடைந்துள்ளனர் . இன்று அதிகாலை 3.45 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது . சூளகிரி போலீசார் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள், காயமடைந்த காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,
மேலும் இந்த கோர விபத்தில் போச்சம்பள்ளி தாலுகா பன்னந்தூரை சேர்ந்த ஓட்டுனர் வேடியப்பன், அரூரை சேர்ந்த நடத்துனர் சுதாகர் மற்றும் நாட்றம்பள்ளி நந்தி பெண்டா வெலகல்நத்தம் சேர்ந்த சின்னகண்ணு என்ற மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே பலி, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் நேரில் பார்வையிட்டார், அதேபோல் தகவல் அறிந்த உடனே கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறி தேவையான மருத்துவ உதவி செய்யவும் உயர் சிகிச்சை அளிக்கவும் சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்
செய்தியாளர் : சி.முருகன்
கருத்துகள் இல்லை