• சற்று முன்

    திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பாளர் மாண்புமிகு எ.வ.வேலு MLA., அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் குவிந்தவண்ணம் உள்ளன


    திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பாளர் மாண்புமிகு எ.வ.வேலு MLA., அவர்களின் தனி கவனத்திற்கு வந்த முத்து விநாயகர் கோயில் தெருவில் உள்ள காவலர் குடியிருப்பில் அதிக கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது அதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள்,குழந்தைகள் பெரும் கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.

    மேலும் செடி,கொடிகள்,புதர்கள் அதிகமாக உள்ளதால் குழந்தைகள் அதிகம் நடமாடும் இடத்தில் பூச்சி,பூரான்,தேள், பாம்பு போன்றவைகள் நடமாட்டத்தில் உள்ளதால். அதன் பகுதியில் உள்ள தூய்மை அருணை காவலர்கள் மூலம் உடனடியாக சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டுமென்று ஆணையிட்டார். அதைத் தொடர்ந்து இன்று 27-9-2019 வெள்ளிகிழமை காலை முதல் மாலை வரை காவலர் குடியிருப்பு பகுதி முழுவதும் தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் A.A.ஆறுமுகம் தலைமையில் தூய்மை அருணை காவல் படை மூலமாக JCP எந்திரத்தை வைத்துக்கொண்டு தூய்மை பணி சிறப்பாக செய்யப்பட்டது. அதற்கு அந்த பகுதியில் உள்ள காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை மற்றும் காவலர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களும் பொதுமக்கள் இப்பணியை மிக சிறப்பாக செய்து வரும் திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பாளர் மாண்புமிகு எ.வ.வேலு MLA., அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்தார்கள்


    செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி 



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad