திருப்பத்தூர் அருகே கருவுற்ற மூன்று மாதத்தில் விட்டுச்சென்ற கணவரை சேர்த்து வைக்கும்படி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனைவி புகார்
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் அன்புமணி (22) இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆராய்ச்சி மகள் சிவரஞ்சினி (22) ஆக இருவரும் சுமார் ஒரு வருடமாக வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி 24.1.18 ஆம் தேதி ஆவாரம் குப்பம் பகுதி ஸ்ரீ திருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சிவரஞ்சனி அவரை வற்புறுத்தி திருப்பத்தூர் சார் பதிவு அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்து கொண்டார். இந்நிலையில் இருவரும் சொந்த ஊரான பொம்மிகுப்பத்திற்க்கு சென்ற போது அன்புமணி வீட்டில் எதிர்ப்பு அதிகரிக்கவே இருவரும் அதே பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்தனர். அதன் பின்பு சிவரஞ்சினி மூன்று மாதமாக கருவுற்ற நிலையில் இருந்துள்ளார். பிறகு சிவரஞ்சினியை அன்புமணி அவரது தாயார் வீட்டில் ரூபாய் 50,000 வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். சிவரஞ்சனியும் தனது தாய் வீட்டிற்கு சென்ற பணத்தை கேட்டுள்ளார்.
சிவரஞ்சினியின் தாய் ஆராய்ச்சி இது இரவு நேரம் என்பதால் காலை உனக்கு நகையை அடமானம் வைத்து முதலில் 20 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று கூறியுள்ளார். எனக்கு 50,000 மொத்தமாக வேண்டும் என்று கூறி அன்புமணி வாடகை வீட்டில் இருந்து தப்பித்து பெங்களூருக்கு சென்று விட்டார். அதுமட்டுமன்றி அன்புமணியின் பெற்றோர்கள் சிவரஞ்சனி விட்டு வந்தால் உனக்கு வேறு ஒரு திருமணம் செய்து தருவதாக கூறி உள்ளதை அடுத்து அன்புமணி பெங்களூருக்கு தப்பிச் சென்று விட்டார். 3 மாத கர்ப்பிணியாக சிவரஞ்சனி விட்டுச்சென்ற அன்புமணி இதுவரை வராததால் தற்போது சிவரஞ்சினி 7 மாத கைக்குழந்தையுடன் உள்ளார்.அன்புமணி பெற்றோர்கள் தனக்கு தெரியாமல் வேறு ஒரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதாக தகவல் கிடைத்ததாலும் தனது கைக்குழந்தையுடன் உண்ண உணவின்றி மிகவும் சிரமப்பட்டு வருவதால் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதால் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவரை சேர்த்து வைக்கும்படி புகார் மனுவை கொடுத்தார்.
கருத்துகள் இல்லை