புனித அருளானந்தர் ஆலயத்தில்ஓரியூர் ஆலய அர்சிப்பு விழாவில் செருப்பு வீசி கலவரத்தால் பரபரப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே ஓரியூர் கிராமத்தில் உள்ள புனித அருளானந்தர் ஆலயத்தில் அர்ச்சிப்பு செய்ய சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் ஓரியூர் வர இருந்தார். இவரால் தலித் கிறிஸ்தவ மாணவனுக்கு குருப்பட்டம் வழங்கப்படவில்லை எனவும் அதனால் ஏற்பட்ட கலவரத்தில் தலித் கிறிஸ்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு பல்வேறு தலித் கிறிஸ்தவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது என்றும், மேலும் சார்லஸ் என்பவர் கொல்லப்பட்டார் என்றும் கூறி தலித் கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு போராடி வருவதாகவும், அதனால் ஓரியூர் ஆலய அர்சிப்பு விழாவிற்கு வரும் ஆயர் சூசைமாணிக்கத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் காவல்துறையினர் காவல் பணியில் ஈடுபட்டதால் ஆலயத்துக்கு உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் ஆலயத்திற்குள் ஒரு குறிப்பட்ட சிலர் மட்டும் அனுமதிக்கப் பட்டு ஆயர் சூசைமாணிக்கம் கலந் கொண்ட போது மதபோதகர்கள் அர்ச்சிப்பு செய்து கொண்டிருந்தபோது உள்ளே இருந்த இளைஞர் ஒருவர் தனது செருப்பை கழட்டி அவர்கள் மீது வீசுகிறார் மீண்டும் ஒரு செருப்பை வீசு முற்படும் பொழுது அருகில் இருந்த ஒருவர் பிடித்து வெளியே கூட்டிச் செல்கிறார் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது
கருத்துகள் இல்லை