வெள்ளப்பெருக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது
வடகிழக்கு பருவமழை முன்னிட்டு வெள்ள பெருக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செயல்முறை விளக்கம், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி துவக்கி வைத்து பங்கேற்றார், ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்பு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், திருவண்ணாமலை நகரில் உள்ள ஐயங்குளத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் பொதுமக்களிடையே வெள்ளப் பெருக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் முன்னிலையில் மழை வெள்ள காலங்களில் செய்யக்கூடாதவை, மற்றும் செய்ய வேண்டியவைகள் குறித்து செயல்முறை விளக்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் வெள்ளத்தில் சிக்கியவருக்கு முதலுதவி அளிப்பது போன்ற பல்வேறு நிகழ்வுகள் குறித்து செயல்முறை விளக்கங்கள் நடத்தப்பட்டன, இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கையேடுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை