Header Ads

  • சற்று முன்

    திருத்துழாய் (துளசி) சுய சரிதம் ஆசிரியர் - பொன்முகரியன்


    ஆதி   மனிதன்  இயற்கையை  தெய்வமாக  வணங்கினான்  . மருத்துவ  குணமுடைய மரங்கள்   செடிகள்  புல்  போன்றவற்றை  வணங்குவதால்  தன்னையும்   தன்னை  சூழ்ந்துள்ள  மக்கள்  இனத்தை  காக்கும்  தற்காப்பு  கவசமாக  எண்ணினான் . கொடிய  விலங்குகள்  விஷ ஜந்துக்கள்  இவற்றால்  ஏற்படும்  துன்பங்கள்   இயற்கையால்  உண்டாகும்  நோய்களுக்கும்  நிவாரணம்  மூலிகைகளே  இதனை உணர்ந்து  நடந்தான் 

    பரிணாம  வளர்ச்ச்சி  அடைந்ததும் மனிதன்  ஐவகை  நிலங்கள்  பிரித்தான்  அவற்றிக்குரிய  தெய்வங்களை துளசி  செடி  திருமாலுக்கு   மிகவும்   பிடிக்கும் . எனவே  பெண்கள்  சிறுவர்  முதல் தொண்டு  பழுத்த  மூதாட்டி  வரை  துளசி  பூஜை  செய்வதில்  தவறில்லை  கன்னி பெண்கள் வணங்கினால்  நல்ல  கணவன்  கிடைப்பான் . சுமங்கலிகள்  பூஜை  செய்வதால்  கணவனுக்கு  குண்டல  கவசமாக  பக்கத்துணை   நிற்கும் . கணவனை  இழந்த  பெண்கள் வணங்கினால்  முத்தி  கிடைக்கும்  துளசியை  பிரதட்சணம்  செயதோர்  அனைவருக்கும்  வைகுண்ட  வாசல்   காத்திருக்கும் 

    துளசிச்செடியாக  காணப்படினும்   ஸ்ரீ கிருஷ்ணனுக்கு  உகந்த   அந்தரங்க விசுவாசமுள்ள தேவதை அவளது சரிதம் தேவி பாகவதத்தில்  விரிவாக  வருணித்து  கூறப்படுகிறது ..   இந்த  துளசி  யார்   கிருஷ்ணனுக்கும் இவளுக்கும்  இடையே    பிரேமை  எவ்வாறு  ஏற்பட்டது .

    துளசி  என்பவள் கோகுலத்தில்  ஸ்ரீகிருஷ்ணனுக்கு  பிரியமான  உத்தம  கோபியாவாள் .அவள் கண்ணனிடம் பேரன்பு  கொண்டு மெய் மறந்து அருகே  வருபவரையும்  காணாமல்  பகவான் அழகில்  மயங்கி  நின்றாள்   இதனைக்  கண்ட ராதை  தனக்கு  மடடுமே  உரியவன்  ஸ்ரீ  கிருஷ்ணன்    அவனை கண்டு  ரசிப்பது  பொறுக்காமல் கண்கள்  கோபத்தில்  ஜொலிக்க துளசியை  பூமியில்  ஒரு  மானிட  பெண்ணாய்  பிறக்கும் படி சபித்தாள் . 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad