சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகரில் CJC மற்றும் பிருந்தாவன் பள்ளி மாணவர்கள் இணைந்து பொது மக்களிடையே டெங்கு விழிப்புணர்வு நடத்தினர்.
கொருக்குப்பேட்டை பாரதி நகரில் சி.ஜே.சி மற்றும் பிருந்தாவன் பள்ளி மாணவர்கள் டெங்கு பற்றிய விழிப்புனர்வு ஏற்படுத்தும் வகையில் கொசுக்களை ஒழிப்போம், டெங்குவை தவிர்ப்போம்,என எழுதி கையில் பதாதைகள் ஏந்தியபடி விழிப்புனர்வு பேரணி நடத்தினர். இதில் பள்ளியின் தாளாலர் டேனியல் சென்னை பெருநகர மாநகராட்சி வார்டு 47 வார்டு சுகாதாரத்துறை ஆய்வாளர்கள்,அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
.நிகழ்ச்சியில் சுகாதாரத்தை பேணிகாப்பது குறித்தும் பொதுமக்களுக்கு பள்ளி மாணவர்கள் டெங்கு நோயினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், தம்மை பாதுகாத்து கொள்வது பற்றிய விழிப்புனர்வு நாடகங்கள் நிகழ்த்தியும், பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் சேர்ந்து சுகாதாரத்தை பேணிக்காப்போம்! , டெங்கு நோயை ஒழிப்போம்! என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இறுதியாக பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது .
கருத்துகள் இல்லை