துளசி விரதம் - கிருஷ்ணா அவதாரம் ஆசிரியர் - பொன்முகரியன்
ஸ்ரீ கிருஷ்ணன் தன் லீலை அரங்கேறியதும் பூரிப்பு அடைந்தான் .
ராதையின் சாபத்தின் படி தர்மத்வஜன் என்ற அரசன் அறம் செய்வதே தன் பிறவியின் பயன் என எண்ணியவாறு நெறியுடன் வாழ்ந்து வந்தான் . அவனின் நல்ல உள்ளத்திற்கு அன்பே வடிவான குணவதி மாதவி என்னும் மங்கையை மணந்து இல்லற தர்மத்தை நல்லறமாக வாழ்ந்து வந்தனர் அயோவை வாக்கின் படி திருமாலுக்கே அடிமை செய் என்பதனை ஏற்று திருமால் மீது பக்திக் கொண்டு இமைப் பொழுதும் மறவாமல் இறைப்பணி செய்தார் தன்னலமற்ற சேவை மனப்பான்மையால் இறைவன் அருள் புரிந்தார். ராதையின் சாபத்தால் துளசி பூலோகத்தில் தர்மத்வஜனுக்கும் மாதவிக்கும் மகளாக ஜெனித்தா.ள் அவள் கோலோச்ஸும் கோபிகை என்பதால் அப்பிரதமான அழகுடன் திகழ்ந்தாள் .ஆண்டாள் எப்படி அரங்கனை தவிர மானிடனை மணக்காமல் பாவை நோன்பு நோற்றாளோ, அவ்வாறே கிருஷ்ண பக்தி கண்ணனின் மீது கொண்ட பக்தி பேரன்பாக மாறியது.
மானிடனாக பிறந்த தான் இறைவன் எம்பெருமானை தவிர மற்றொருவர்க்கு வாழ்க்கைப் பட இயலாது . ஸ்ரீ கிருஷ்னலீலையை கானமாகப் பாடி மகிழ்ந்தாள். பெற்றோர் மணம் செய்துக்கொள்ள வற்புறுத்திய சமயம் என் நெஞ்சம் என்பெருமானுக்கே உரியது. அவரை யே என் மனம் ,ஏற்கும் அவரை கண்ணால் காண வேண்டுமெனில் மனம் ஒருநிலை பெறவேண்டும். அதை பெற காடடுக்குச் சென்று தவம் செய்யப் போகிறேன் என பெற்றோரிடம் வாதம் புரிந்தாள் அரசன் தர்மத்வஜன் மகளின் ஆசையை ஒரு தகப்பனாக சிந்தித்தாலும் திருமாலுக்குக்கே அடிமை செய்து வாழ்வதே பிறப்பின் பலனாகக் கருதியவர்.அதனால் மகளின் விருப்பப்படி நடக்க உரிமை வழங்கினார். மெத்த மகிழ்சசி அடைந்தாள் தந்தையின் அனுமதி அருளாசியுடன் கானகம் சென்று தவம் செய்தாள். அவளின் விட முயற்சி எம்பெருமானின் இதயகமலத்தில் துளசிக்கு இடம் கிடைத்தது விஸ்வரூப தரிசனமாக அவள் முன் தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண் டுமென் கேட்கவும் தன் ஆவலை தெரிவித்தாள் அவளின் ஆசையை அறிந்ததும் இப்பிறப்பில் ஏற்றுக் கொள்ள முடியாது, ஆனால் தக்க சமயத்தில் ஏற்றுக் கொள்கிறேன் அதற்கு முன் என் திரு கரத்தின் அம்சமாக அவதாரமான சங்க சூட னை கணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென கட்டளை இட்டார். அவ்வாறே கசங்கசூடனை திருமணம் செயது இல்லற வைகுண்டத்தில் கிருஷ்ணனுடைய சரீரத்திலிருந்து தோன்றியவன் சுதர்மன் என்பவன் .இவன் வ்ந்தப் பெருமானின் தேகத்தில் இருந்து தோன்றியதால் சற்று தலைக்கனத்துடன் திரிந்தான்
தொடரும் .............
கருத்துகள் இல்லை