Header Ads

  • சற்று முன்

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நடைபெற்றது


    தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து பெற்றோர்கள்  ஆசிரியர்களுடன்   கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது.

    நிகழ்வுக்கு வந்தவர்களை ஆசிரியை முத்து லெட்சுமி  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக இணை  செயலர் கௌசல்யா  முன்னிலை வகித்தார்.மாணவர்களின் நடத்தை,தனித்திறமைகள்,கல்வி தொடர்பான முன்னேற்றம் குறித்து பெற்றோர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் பதில் அளித்தனர்.மாணவர்கள் பள்ளியில் ஆண்டு முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்தனர்.மழைக்காலத்தில் மாணவர்கள்  பாதுகாப்பக இருக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும்,டெங்கு தொடர்பான விழிப்புணர்வும் பெற்றோர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.முதல் பருவம் முழுவதும் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள் விஜயபாண்டி,முத்தையன் மற்றும் அவர்களது பெற்றோர்கள் லெட்சுமி,வெள்ளையம்மாள் ஆகியோருக்கும்   பரிசுகள் வழங்கப்பட்டது. பெற்றோர்கள் சார்பாக கார்த்திகா ,சித்ரா, வைதேகி, கமலா, பாண்டியம்மாள் ஆனந்தி, காந்தி , ஜேசுராஜ் , மாலா ஆகியோர் பள்ளியின் பல்வேறு செயல்பாடுகளை பாராட்டி பேசினார்கள்.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

    பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து பெற்றோர்கள்  ஆசிரியர்களுடன்   கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது. மாணவர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது 


    செய்தியாளர் : வி. காளமேகம் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad