• சற்று முன்

    மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட எட்டு நபர்கள் கைது **

    மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS.,  அவர்கள் உத்தரவுப்படி நேற்று எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சௌந்திரபாண்டி அவர்கள் எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள DSP நகர் மெயின்ரோட்டின் அருகில் அமைந்துள்ள இஸ்ரா பாலி ஸ்பா” என்ற மசாஜ் சென்டரில் திடீர் சோதனை மேற்கொண்டதில் அங்கு மசாஜ் சென்டர் என்ற பெயரில் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து பணம் சம்பாதிப்பது  கண்டுபிடிக்கப்பட்டது. 

    மேலும் விசாரணை செய்ததில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது உதயகுமார் 43/19, த/பெ.பாலகிருஷ்ணன், எல்லீஸ் நகர், மதுரை, சதீஸ் 32/19, த/பெ. ராமமூர்த்தி, எல்லீஸ் நகர், மதுரை, கோவிந்தராஜ் 26/19, த/பெ.வெங்கடேசன், துரைச்சாமி மெயின் ரோடு, மதுரை, வினோத் 31/19, த/பெ.ராஜேந்திரன், புதுஜெயில் ரோடு, மதுரை, ஆரணி 23/19, த/பெ.ஆஷி, மணிப்பூர் மாநிலம், டின்ரெய்லியூ 24/19, த/பெ.கஜியா, மணிப்பூர் மாநிலம், தொகிரோயூ 21/19, த/பெ.சைலாஷ், மணிப்பூர் மாநிலம், ஹினி 26/19, த/பெ.தோ, மத்திய டெல்லி, என தெரிய வந்தது எனவே எட்டு  நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு இரு சக்கர வாகனம் ஒன்பது கைபேசிகள் மற்றும் பணம் ரூ. 3000/- கைப்பற்றப்பட்டு அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பினார்.


    செய்தியாளர் : வி. காளமேகம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad