Header Ads

  • சற்று முன்

    சேலம் பெரியார் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி காலநிலை அவசர நிலை பிரகடனம் குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்


    20.09.2019 வெள்ளிக்கிழமை நேற்று  சேலம் பெரியார் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு ஜிகே மணி அவர்களும் மற்றும் சேலம் மாவட்டம் பசுமைத்தாயகம்  தன்னார்வலர்களும் இணைந்து பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியே வரும் அனைவருக்கும் காலநிலை அவசர நிலை பிரகடனம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கொடுத்து புவி வெப்பமடைதல் குறித்த உண்மைகளையும் அதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் அதை தடுப்பது எப்படி என்று குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதுகுறித்து  பேசும்போது பாமக தலைவர் திரு ஜி கே மணி அவர்கள் உலக மக்கள் அனைவரும் பேராபத்தில் சிக்கி உள்ளதாகவும் புவி வெப்பம் அதிகரிப்பதால் ஒட்டுமொத்த மனித குலம் அழிவின் விளிம்பில் நிற்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுவதை எடுத்துரைத்து புவி வெப்பமடைதலால் அதிகம் பாதிக்கும் பகுதியாக தமிழ்நாடு உள்ளதாகவும் இந்த பேராபத்தை தடுக்க உலகின் ஒவ்வொரு அரசாங்கமும் ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு நிறுவனமும் அவசரநிலை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
    விழிப்புணர்வு பிரச்சாரத்தில் திரு சதாசிவம் பாமக ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் , திரு பாபு பாமக மாநில துணை அமைப்பு செயலாளர் , திரு கலா செல்வன் பாமக மாவட்ட துணை செயலாளர்,  திரு சத்ரியா பசுமைத்தாயகம் மாநிலத்தலைவர்,  திரு முத்துக்குமார் பசுமை தாயகம் மாவட்ட தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். 


     செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad