Header Ads

  • சற்று முன்

    வாணாபுரத்தில் மகப்பேறு ஆரம்ப சுகாதார மையத்தில் காடு வளர்ந்திருக்கும் முட்புதர்கள் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி ?


    வாணாபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முட்புதர்களால் மண்டி கிடக்கிறது. இதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வாணாபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி பிரசவத்திற்காக கர்ப்பிணிகள் தினமும் வந்து செல்லக்கூடிய இடமாகவும் இருந்து வருகிறது.

    மேலும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் முக்கிய சுகாதார நிலையமாகவும் இந்த வாணாபுரம் சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையம் சுற்றுப்பகுதியிலும் மற்றும் மகப்பேறு சிகிச்சை மையத்தின் முன் பகுதியிலும் அதிகளவில் முட்புதர்கள் மண்டி கிடைப்பதால் இங்கு பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகளின் நடமாட்டம் உள்ளது. இதனால் இங்கு வரும் நோயாளிகள் அச்சப்படுவது மட்டுமல்லாமல் வருவதையும் தவிர்த்து வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தினமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் நிலையில் கட்டிடத்தின் சுற்றுப் பகுதி முழுவதும் முட்புதர்கள் மற்றும் செடி, கொடிகளும் அதிகளவில் வளர்ந்துள்ளதால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் நோயாளிகள் பெரிதும் அச்சப்பட கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் நலனை கருத்தில்கொண்டு சுகாதார நிலையத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள முட்புதர்களையும், செடி, கொடிகளையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad