• சற்று முன்

    திருவண்ணாமலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 9 சுய உதவி குழுக்களுக்கு நேரடி கடன் வழங்கப்பட்டது


    திருவண்ணாமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நேரடி கடன் வழங்கும் விழா கீழ்நாத்தூரில் நடைபெற்றது. திருவண்ணாமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள்நகர் ராஜன் தலைமையில் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டது. 9 சுய உதவி குழுக்களுக்கு 53 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் கடன் தொகையை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் மற்றும் வங்கியின் செயலாளர் வாசுதேவன் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad