Header Ads

  • சற்று முன்

    திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளை  கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசூர் கூட்ரோட்டில்அனைத்துக் கட்சி சார்பில் நடைபெற்ற மாபெரும் கையெழுத்து இயக்க போராட்டம் நடைபெற்றது.


    திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளை  கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசூர் கூட்ரோட்டில் விழுப்புரம் இணைப்புக் குழு மற்றும் அனைத்துக் கட்சி சார்பில் நடைபெற்ற மாபெரும் கையெழுத்து இயக்க போராட்டம் நடைபெற்றது.

     விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூர் கூட்ரோட்டில் அனைத்து கட்சி மற்றும் விழுப்புரம் இணைப்புப் சார்பில் விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர், திருநாவலூர், முகையூர் பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க வேண்டும்.திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளை தாலுகாவாக அறிவிக்க வேண்டும். விழுப்புரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனைத்து பகுதிகளையும் விழுப்புரம் மாவட்டத்திலேயே இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்க  போராட்டம் நடைபெற்றது.*

    இந்த கையெழுத்து இயக்க போராட்டத்தினை  விழுப்புரம் தேமுதிக மாவட்ட செயலாளரும் முன்னாள்  எம்.எல்.ஏவுமான வெங்கடேசன் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது.     விழுப்புரம் மாவட்டம் மிகப்பெரிய மாவட்டம் இம்மாவட்டத்தின் இரண்டாக பிரிக்க வேண்டும் என்று 2007-ம் ஆண்டு முதல் தேமுதிக குரல் கொடுத்து வருகிறது. திருவெண்ணெய் நல்லூரை தாலுகாவாக அறிவிக்கவேண்டும் என்றும்  கள்ளக்குறிச்சி பகுதி மக்களுக்கு புதிய மாவட்டம் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆட்சியர் அலுவலகம் எப்படி தேவையோ அதேபோல விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணைநல்லூர் முகையூர்  அரசூர் மடப்பட்டு சித்தலிங்கமடம் பகுதி மக்கள்  விழுப்புரம் வேண்டுமென்று விரும்புகின்றனர். திருவெண்ணைநல்லூர் அரசூர் பகுதி மக்கள் 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கள்ளக்குறிச்சி சென்றுவர சிரமம் உள்ளது. அரசு ஆட்சியாளர்கள் அதிகாரிகள் மக்கள் எதை விரும்புகிறார்களோ மக்கள் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் மாவட்டம் பிரிக்க வேண்டும் .ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் இருந்த நல்லூர் ஒன்றியம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் இருந்தது. பெரம்பலூர், அரியலூர் ஆகியவை  2 தொகுதி கொண்ட மாவட்டமாகவும் 13 தொகுதிகளை கொண்ட வேலூரை 3 மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது கள்ளக்குறிச்சியில் தனி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள கிரன் குரலா அவர்கள் இதுவரை கள்ளக்குறிச்சியை விட்டு வேறு எங்கும் சென்றதில்லை. மக்களின் கருத்தையோ விருப்பத்தையே கேட்டதில்லை அந்தந்த பகுதி மக்களின் கருத்து கேட்கும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். .இந்த பகுதி மக்கள் விழுப்புரத்தில் இணைவதை விரும்புகின்றனர் இதனை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
    இதில் தேமுதிக  மற்றும் அனைத்து கட்சியினர்.விழுப்புரம் மாவட்ட இணைப்பு குழுவினர். பொதுமக்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad