• சற்று முன்

    திருவாடானையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்


    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சியாக அணைத்து விநாயகர் கோவில்களிலும் நடைபெற்றது. திருவாடானை அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர், கோவில் முன்பு உள்ள ஆறாம் மண்டகப்படி மண்டபத்தில் உள்ள கைலாச விநாயகர், மற்றும் திருவாடானை பேரூந்து நிலையத்தில் உள்ள ஆதிரெத்தின கணபதி ஆலயங்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதணைகள் நடைபெற்றது. 
      பாரதிநகரில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதி உலாவந்தனர். பின் பக்தர்கள் கொண்டுவந்த பால் வைத்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad