Header Ads

  • சற்று முன்

    கிழக்கு தாம்பரம் பாரதமாதா தெருவில்ஜெயகோபால் கரோடியா தேசிய மேல் நிலைபள்ளி ஆசிரியர் பெனாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார்


    சென்னையை  அடுத்த கிழக்கு தாம்பரம் பாரதமாதா தெருவில் ஜெயகோபால் கரோடியா தேசிய மேல் நிலைபள்ளி உள்ளது அரசு நிதி உதவியுடன் நடைபெறும் இந்த பள்ளியில் வாசுதேவன்(வயது 52 ) புவியியல் ஆசிரியராகவும் என்சிசி ஆசிரியராகவும் வேலை பார்த்து வருகிறார் கடந்த 2 மாதமாக இவருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் பள்ளியில் இன்று அவருக்கு சஸ்பெண்டு உத்தரவு வழங்கப்பட்டது இதை பார்த்த  வாசுதேவன் அதிர்ச்சியடைந்து பள்ளி ஆசிரியர் ஓய்வு அறையில் கழிவறை சுத்தம் செய்ய வைக்கப்பட்டிருந்த பெனாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார் இதை பார்த்த சக ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து அவரை சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் இது தொடர்பாக வாசுதேவன் கூறுகையில்:  நான் 25 வருஷமாக வேலை செய்து வருகிறேன் என்சிசி ஆபிசராக இருக்கேன். 2 மாதமாக பள்ளி தலைமை ஆசிரியையும் செயலரும் எனக்கு மனஉளைச்சல் பண்றாங்க பொதுவான இடத்தில் நிற்க வைத்து என்னை அவமானபடுத்துகிறார்கள் என்னை ஒருமையில் திட்டுகிறார்கள் என்சிசி மாணவன் ஒருவனுக்கு கொடுக்க வேண்டிய லேப்டாப்பை கேட்க சென்றபோது வாயை மூடி விட்டு போ என்றனர் என்றார்

    பள்ளி நிர்வாகம் எந்த விசாரணையும் இல்லாமல் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிக்கு புகார் தெரிவித்துள்ளதாக  சக ஆசிரியர்கள் தெரிவித்தனர் இதற்கிடேயே ஆசிரியர் நடவடிக்கை சரியில்லாத்தால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பள்ளி நிர்வாக தரப்பில் தெரிவித்தனர் இந்நிலையில் நேற்று மாலை பள்ளி வளாகத்தில் வாசுதேவன் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில்ஈடுபட்ட ஆசிரியர் களுக்கு ஆதரவாக ஜாக்டோ ஜியோ அமைப்பினரும் போராட்டம் நடத்தினர. இதனால் கல்வி துறை அதிகாரிகளும் வந்தனர் இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது 

    சேலையூர் உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர் 
    இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது  அதன் பின்னர். வாசுதேவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை வாபஸ் பெற படும் என நிர்வாக தரப்பில் தெரிவித.துள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றன

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad