Header Ads

  • சற்று முன்

    உப்பூரில் ஜவுளி பூங்கா திறப்பது சம்பந்தமாக கருத்து கேட்பு கூட்டம், மக்கள் எதிர்ப்பு


    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் தாலுகா  உப்பூரில் தமிழக அரசால் பல கோடி ரூபாய் செலவில் ஜவுளி பூங்கா தொடங்க உள்ளது. இந்நிலையில் ஜவுளி பூங்கா தொடங்குவது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தொண்டியில் உள்ள  தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்த ஜவுளி பூங்கா அமைவதால் சாலைகள் விரிவடையம், கடல் நீரை குடிநீராக மாற்றும் செய்யப்படும்,  10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் இதனால் இப்பகுதி மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சித் எடுத்துரைக்கப்பட்டது.   
          
    ஆனால் இதற்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இதேபோல் ஏற்கனவே உப்பூர் அனல் மின் திட்டம் தொடங்க இருந்த போதும் இதே போல்  கூறி தற்போது பல கிராமங்களும் மற்றும் விவசாய நிலங்களும் அழிக்கப்பட்டுள்ளது. மேலும்,  கிராம மக்களுக்கு எவ்வித வேலையும் வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த ஜவுளி பூங்கா தொடங்குவதாக இப்பகுதியில் சாயப்பட்டறை தொடங்கப்படும் அதனால் கடலில் உள்ள மீன்கள் செத்து  கடல் வளம் பாதிக்கப்படும் என்றும்  அதனால் மீனவர்களும் அதனை சார்ந்த தொழில்களில்   ஈடுபடும் ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த கருத்து கேட்பு கூட்த்தில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டார்கள்

    செய்தியாளர் : திருவாடானை - LV . அனந்தன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad