Header Ads

  • சற்று முன்

    ஈரான் நாட்டு கடற்படியினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 1/2 மாதம் சிறைவாசம் அனுபவிக்கப்பட்டு விடுதலையானார்கள்


    துபாயில் மீன்பிடி ஒப்பந்த கூலியாக சென்று 27/08/2019 -ல் ஈரான் கடற்படையால்  கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் ஏரகாடு கிராம மீனவர் சந்திரகுமாரும் அவருடன் சென்ற ஆந்திரா, மற்றும் குஜராத் மாநில மீனவர்கள் 7 பேரும்  18/09/2019 அன்று 21 நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டு துபாய் வந்து சேர்ந்தனர். மீனவரை விடுவித்திட கோரி இராமாநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சம்மந்தப்பட்ட மீனவர் குடும்பத்தின் சார்பிலும் கடல் தொழிலாளர் சங்கம் (Citu) சார்பிலும் மனுக்கள் கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிராம மக்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்த மாவட்ட ஆட்சியர்  மற்றும் மீன்வளத்துறை நிர்வாகங்களுக்கும்  நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் கடந்த 2016 டிசம்பரில் இது போன்று ஈரான் கடற்படையின் கைது நடவடிக்கைக்கு உள்ளாகி சுமார் 5-1/2 மாதங்கள் சிறைப்பட்டு விடுதலையான மீனவர் குடும்பங் களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வரின் பொது நிவாரணநிதியில் இருந்து வழங்கப்பட்டு வந்த குடும்ப பாதுகாப்பு நிதி இது வரை கிடைக்கப் பெறாததை மேற்படி மீனவர்களின் ஏழ்மை நிலையை கணக்கில் கொண்டு தமிழக அரசு உடன் வழங்கிட மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவிட வேண்டுகிறோம்.  இவண் K.முனியாண்டி மாவட்ட தலைவர் M.கருணாமூர்த்தி மாவட்ட செயலாளர் கடல் தொழிலாளர் சங்கம் (Citu) இராமநாதபுரம் மாவட்ட குழு

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad