பிரதமர் மோடியின் 69வது பிறந்த நாள் விழா - மரக்கன்று நடும் விழா
பிரதமர் மோடியின் 69வது பிறந்த நாள் விழாவையொட்டி பிஜேபி சார்பில் ஒரு வாரம் சேவை வாரமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டியில் 69 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. கதிரேசன் கோயில் ரோட்டில் சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து மந்தித்தோப்பு இன்பென்ட் கல்வி அறக்கட்டளை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர பாஜக பொது செயலாள்கள் தினேஷ்குமார், பாலசுப்பிரமணியன், நகர இளைஞரணி தலைவர் காளிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை