• சற்று முன்

    ஆரணி அருகே 1கோடி மதிப்புள்ள எரிசாராயம் பிடிபட்டது ஓட்டுனர்கள் 4 பேர் தப்பி ஓட்டம்


    ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலை நெசல் கிராமம் அருகில் விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  ஆரணி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது டேங்கர் லாரி நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. அதனை பின்தொடர்ந்து சென்ற போது நெசல் கிராமத்தில் ஏரிப்பகுதியில் சேற்றில் லாரி சிக்கிக்கொண்டது. அப்போது அங்கு  விழுப்புரம் மத்திய புலனாய்வுத்துறையினர் சென்ற போது 500 கேன்களில் இருந்த 25000 லிட்டர் எரிசாராயத்தையும் கர்னாடக மாநில பதிவெண் கொண்ட லாரி உள்ளிட்ட 2 லாரிகள் மற்றும்  நான்கு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.  அங்கிருந்த நான்கு பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    பறிமுதல் செய்த 25000 லிடர் எரிசாராயத்தை போளூர் கலால் போலிஸ் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு 1கோடியாகும்

    செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad