• சற்று முன்

    தேவகோட்டை அருகே வடகீழ்குடி ஆற்றுப்படுகையில் பெண் ஒருவர், கொலை செய்து புதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுப்பு. 3 பேர் கைது .


    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், பணத்திற்காக 50 வயது பெண் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டு ஆற்று மணலில் புதைத்த கொடூரம்".

    3 பேர் கைதுசெய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகேயுள்ள விலானூர் கிராமத்தை சேர்ந்தவர் பால்ச்சாமி.கிராம தலையாரியான இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி பஞ்சவர்ணம் தன் மகன் பால்வண்ணனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் பஞ்சவர்ணம் அடகு வைத்த நகைகளை மீட்டு வர வீட்டைவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை. மகன் பால்வண்ணன்,பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் பஞ்சவர்ணம் இருக்கும் இடம் தெரியவில்லை. இதனால் ஆவுடையார்கோவில் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணை நடத்தி வந்த நிலையில், பொன்பேத்தி கிராம வருவாய் ஆய்வாளரிடம் அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து, சிவகுமார் மற்றும் வடமாநில வாலிபர் லல்லிங்பாய் ஆகிய மூன்று பேரும் பஞ்சவர்ணம் கொலையில் போலீஸ் தங்களை தேடுவதாக கூறி சரணடைந்தனர். வருவாய் ஆய்வாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது குற்றவாளிகள் கொடுத்த தகவல் அதிர்ச்சி அடையச் செய்தது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆற்று பகுதியில் ரூபாய் மூன்று லட்சம் பணத்துடன் 50 வயது பெண் பஞ்சவர்னம் வந்த போது இந்த மூன்று பேரும்  சேர்ந்து கட்டையால் தாக்கி பஞ்சவர்னத்தை கட்டையால் தலையில் அடித்தர்களாம். சம்பவ இடத்திலேயே பஞ்சவர்ணம் துடி துடித்து இறந்தார். அப்போது ஆற்றுக்குள் மணலில் குழி தோண்டி பஞ்சவர்னத்தின் உடலை புதைத்து விட்டார்களாம். தற்போது இக்கொலை யில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்தல் தகவலகள் தெரிய வந்தது.உடனடியாக போலீசார் ஆவுடையார்கோவில் டி.எஸ்.பி.கோகிலா, அறந்தாங்கி போலீஸ் ஆய்வாளர் பால சுப்பிரமணியன், ஆவுடையார் கோவில் போலீஸ் ஆய்வாளர் ரவிச் சந்திரன் மற்றும் போலீசார் கைது செய்யப்பட்ட காளிமுத்து, சிவகுமார், மற்றும் வடமாநில இளைஞர் லல்லிங்பாய் ஆகிய மூன்று பேரையும் சம்பவ இடத்திற்கு பிடித்துச் சென்றனர். அங்கு அவர்கள் பஞ்சவர்னத்தை கொன்று புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார்கள்.
    பின்னர் பஞ்சவர்னத்தின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து விசாரண விசாரணை நடைபெற்று வருகிறது.

    செய்தியாளர் : சிவகங்கை - சண்முக சுந்தரம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad