திருவண்ணாமலை தூசி புதுப்பாளையம் பொது நல நிதியில் 23 1/2 லட்சம் மதிப்பில் கோவில் தேர் அமைக்கும் பணி துவக்கவிழா நடைபெற்றது
தூசி அருகே புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் ஆணையர் பொது நல நிதி ரூ.23½ லட்சம் மதிப்பில் தேர் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தூசி கே.மோகன் M.L.A. தலைமை தாங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன், உதவி ஆணையர் ஜான்சிராணி, ஆய்வாளர் மேகலா, பொறியாளர் ராகவன், தேர் ஸ்தபதி கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பூஜை செய்து தேர் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள், இந்து சமய அறநிலைய துறை பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை