கோவில்பட்டியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தேசிய கல்வி கொள்கை 2019ஐ வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் ஈராசிரியர் பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாக மாற்ற கூடாது. தொடக்க கல்வி துறையை சீரழிக்கும் அரசாணை எண்.145ஐ உடனடியாக திரும்ப பெற வேண்டும். குறுவள மையங்களின் தலைமையிடமாக மேல்நிலை பள்ளிகளை மாற்ற கூடாது. இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வை ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு பின்னர் நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி இஎஸ்ஐ ஆஸ்பத்திரி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் குணசீலன் ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் மகேந்திரன், வட்டார செயலாளர் சகாயராஜ் உள்ளிட்ட ஏராளமானே ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை