தமிழகத்தின் பிக்பாஸ் அதிமுக தான் - அமைச்சர் கடம்பூர் செ.ராஜு
கோவில்பட்டி அருகேயுள்ள திருமலாபுரத்தில் நியாயவிலைக்கடை திறப்புவிழா, சவலப்பேரியில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி கட்டிடம் திறப்பு விழா, சத்திரப்பட்டி - பட்டியூர் சாலை பணிகள் தொடக்க விழா, நாலாட்டின்புதூர் முடுக்குமீண்டான்பட்டி மற்றும் கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தலைமை வகித்தார். விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ சின்னப்பன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்த வைத்து சாலைப்பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில் தமிழக வரலாற்றில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி காட்டியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது வழியில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தியுள்ளார். முதல்வர் வெளிநாட்டு பயணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொச்சைபடுத்தியுள்ளார் .மருத்துவ சேவைக்காக மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் கையெப்பமிட்டு தமிழகத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார் .எம்.ஜீ .ஆர்ருக்கு பின் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்ட ஒரு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும்,திமுக ஆட்சி காலத்தில் செய்ய தவறியதை இந்த அரசு செய்து கொண்டிருப்பதை பொறுக்கமால் கொச்சைபடுத்தி அரசியல் செய்வது எதிர் கட்சி தலைவருக்கு அழகல்ல என்றும், தமிழகத்தின் பிக்பாஸ் அதிமுக தான் என்றும், 40 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த இயக்கம் அதிமுக தான்.1979 அத்திவரதர் வெளியே கொண்டு வந்து பூஜை செய்த போது முதல்வராக இருந்தவர் எம்.ஜீ.ஆர் தான் ,40 ஆண்டுகள் கழித்து அத்திவரதர் பூஜை தற்போது நடந்த போதும் அதிமுக ஆட்சி தான் என்றும், திமுக கைவிட்ட தமிழர்களின் வாழ்வதாரம்,உரிமைகளை மீட்டது அதிமுக தான். இதில் இருந்து யார் தமிழகத்தின் பிக்பாஸ் என்று அனைவருக்கும் தெரியும் .நம்பிக்கை பற்றி தினகரன் போன்றோர் சான்றிதழ் அளிக்க தேவையில்லை என்றும்,ஆட்சி பற்றிய நிறை குறை பற்றி பேசுவது மக்கள் கையில் உள்ளது. ஆகையால் தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர்களை (டிடிவி) அடயாளமே தெரியாமல் மக்கள் அழித்துவிட்டனர்.நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வேறு முடிவை எடுத்தாலும் இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக 9 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்துள்ளனர் .மக்களின் தீர்பே மகேசன் தீர்ப்பு . டிடிவி போன்றவர்கள் எங்களுக்கு சான்றிதழ் தர தேவையில்லை ,
அது எங்களுக்கு அவசியமும் இல்லை என்றும், கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்க ஏற்பாடு அரசு முயற்ச்சி எடுத்து வருகிறது விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கும் என்றும்,தமிழகத்தில் பால் விலை உயர்த்திய போது கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் புதுவையில் பால் விலையை உயர்த்தப்பட்டுள்ளது குறித்து எதுவும் தெரிவிக்கமால் இருப்பதில் இருந்து அவரது அரசியல் தெரிகிறது,சமீபத்தில் நடைபெற்ற மத்திய அரசு பணி தேர்வுகளில் தமிழில் தேர்வு எழுத தமிழக அரசு தான் முயற்சி எடுத்தது என்பதை நல்லகண்ணு போன்றோர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை