காரைக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் ஏ ஐ டி யூ சி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழ்நாடு ஏஐடியூசி சார்பில் காரைக்குடி நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் துப்புறவு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்,ஒப்பந்த பணியாளர்களுக்கு சமவேலைக்கு,சமஊதியம் வழங்க வேண்டும்.பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ,சுதந்திர தினத்திற்கு விடுமுறை போண்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.இக்கோரிக்கைகளை விளக்கி ஏஐடியூசி மாநிலத்துணைச் செயலாளர் பிஎல்.இராமச்சந்தின், மாநிலக்குழு மீனாள் சேதுராமன், ஆர்.கண்ணன்,அமைப்புசாரா சங்க ஏஆர்.சண்முகம்,ராமராஜ்,ஆட்டோ சங்க ஏஜி.ராஜா, முத்துமாரி,ஒலி ஒளி சங்க சரவணன் மற்றும் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.கூட்ட இறுதியில் தொழிற்சங்க பிரதிநிதிகள் நகர ஆணையாளர் அவர்களை சந்தித்து கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப் பட்டது.ஆணையாளரும் நியாயமன கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறினார்.
செய்தியாளர் : சிவகங்கை - சண்முக சுந்தரம்
கருத்துகள் இல்லை