கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பாளையத்து மாரியம்மன்கோயில் நகைத் திருட்டு போனதால் பொதுமக்கள் மறியல் ! !
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பாளையத்து மாரியம்மன் சாமி தரிசனம் செய்ய கோயிலுள் சென்றபோது அம்மன் கழுத்தில் இருந்த நகை மற்றும் வெள்ளி பித்தளை அனைத்தும் கொள்ளை போய் இருந்தன இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துகோயில் பூசாரி கலியமூர்த்தி இடம் கேட்டனர் அவர் சரியான பதில் அளிக்காததால் சந்தேகப்பட்ட பொதுமக்கள் இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் அளித்தனர் புகார் அளித்தும் போலீஸ் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஸ்ரீமுஷ்ணம் சிதம்பரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்
இதனால் போக்குவரத்து வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றனர் இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதியில் உள்ள பாளையத்து அம்மன் நகை திருட்டு போய்விட்டது அதை கண்டுபிடித்து வழங்க வேண்டும் எனக் கூறினார் அதற்கு சந்தேகத்தின் பேரில் பூசாரி கலியமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம் அவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார் நலமுடன் வந்தவுடன் விசாரித்து திருட்டுப்போன நகைகளை மீட்டு தருவதாக வாக்களித்த தன் பெயரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
செய்தியாளர் :கடலூர் - காளிதாஸ்
செய்தியாளர் :கடலூர் - காளிதாஸ்
கருத்துகள் இல்லை