Header Ads

  • சற்று முன்

    குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைத்த கும்பலிடமிருந்து மீட்ட சைல்டு லைன் அமைப்பினர்


    தஞ்சை  ரவீந்திரன் சுமார் 2 வயதில் கடத்தப்பட்டதாக கூறப்படும் தருண் என்ற குழந்தை 2 வருடங்களுக்கு மேலாக பிச்சை எடுக்க வைத்து ஒரு கும்பல் நடமாடி வந்த நிலையில் செல்டு லைன் அமைப்பால் கரூர் பகுதியில் மீட்கப்பட்டு தற்போது 5 வயதாகும் நிலையில் தஞ்சையில் அரசு குழந்தைகள் நல அலுவலகத்தில் பாதுகாப்பாக உள்ள அந்த குழந்தையை பெற்றோர்கள் உரிய ஆதாரங்களுடன் அணுகி அழைத்து செல்லலாம் என தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையரும் வழக்கறிஞருமான திருமதி திலகவதி தெரிவித்துள்ளார்

    தஞ்சையில் நடந்த பேட்டியின் போதுதஞ்சை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர் இந்த பின்னணியில் மதுரை மாவட்டம் விளாச்சேரி பகுதியை சார்ந்த பரமேஸ்வரி என்ற பெண்மணி இருப்பதாகவும் முதலில் தனது 3 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே வந்து பொள்ளாச்சி திருப்பூர் பகுதிகளில் பிச்சை எடுத்து பிழைத்து வந்த நிலையில் கரூர் பகுதியில் 4 குழந்தைகளுடன் பிச்சை எடுத்த நிலையில் சைல்டு லைன் அமைப்பினர் விசாரணை செய்த போது பரமேஸ்வரி தப்பிவிட்டதையடுத்து 3 குழந்தைகள் பெற்றோர்கள் பள்ளியின் பெயர் ஊர் பெயர் தெரிவித்ததையடுத்து 3 குழந்தைகளும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கபட்டனர் இதில் எஞ்சிய தருண் என்ற 5 வயது குழந்தை பெற்றோர் ஊர் பெயர் சொல்லத் தெரியாத நிலையில் சந்தேகத்தின் பேரில் தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை பார்த்த பிறகாவது பெற்றோர்கள் எங்கிருந்தாலும் தொலைக்காட்சி வழியாக தெரிந்து கொண்டு உரிய ஆதாரத்துடன் குழந்தையை பெற்றுச் செல்லலாம் என ஆணையர் திருமதி திலகவதி தெரிவித்தார் பேட்டி: வழக்கறிஞர் திருமதி திலகவதி தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் 



    செய்தியாளர் : மதுரை - காளமேகம் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad