Header Ads

  • சற்று முன்

    மரக்கன்றுகள் நட்டு சுதந்திர தினவிழா கொண்டாடும் ரெட்டிபட்டி அரசு பள்ளி மாணவர்கள்


    சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட உயர் அலுவலர் அவர்களால் அறிவுரை  வழங்கப்பட்டு வருவது வழக்கம். தற்போது ஆண்டுதோறும் மழைப்பொழிவின் அளவு குறைந்து வருவதாலும், மழை நீரின் தேவை அதிகரித்து வருவதாலும்    மாணவர்களுக்கு மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டும், மழை நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் பொருட்டும், இவ்வாண்டு அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தின விழாவின்போது மரக்கன்றுகளை வழங்கியும் ஊன்றியும்  விழா கொண்டாட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உட்பட குறிப்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது . அதனடிப்படையில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம், ரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும்  பள்ளி மாணவர்கள், கிராமங்களுக்குள் சென்று பொதுமக்களை சுந்தரத்தின விழாவுக்கு வரும்படி வீடு வீடாக அழைப்பு கொடுத்ததோடு விழாவில் பங்கு எடுப்பவர்களுக்கு ஒரு மரக்கன்று வழங்கப்படும் என அழைப்பு விடுத்திருந்தனர் அதனடிப்படையில் என்று சுதந்திர தின விழாவிற்கு வருகை தந்த பொதுமக்கள் அனைவருக்கும் ஒரு மரக்கன்றுகளை வழங்கியதோடு தாங்களும் மரக்கன்றுகளை நட்டு சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.  மரக்கன்றுகள் வழங்கும் விழாவில் இப்பள்ளியின் பொறுப்பு ஆசிரியரான திரு. ச. முனியசாமி அவர்களுடன் பள்ளியின் மேலாண்மைக் குழு சமூக ஆர்வலர் உறுப்பினரான திரு செல்வம் அவர்கள் மரக்கன்றுகளை வழங்கினார்  மற்றும் எஸ் எம் சி குழு உறுப்பினர் திரு வெங்கடேசன் அவர்களும்  அனைத்து பெற்றோர்களும்  மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் மரக்கன்றுகளை பெற்றுச் சென்றனர்.

    ஜெயம் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad