• சற்று முன்

    மாஜி ' கிரிக்கெட் வீரர் துாக்கிட்டு தற்கொலை


    இந்திய கிரிக்கெட் அணியின் , முன்னாள் வீரரும் , டி . என் . பி . எல் . , காஞ்சி வீரன்ஸ் அணி உரிமையாளருமான , வி . பி . சந்திரசேகர் , சென்னை யில் உள்ள அவரது இல்லத்தில் , நேற்று இரவு துாக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார் . சென்னை மயிலாப்பூர் விஸ்வேசபுரத்தைச் சேர்ந்தவர் வி . பி . சந்திரசேகர் , 57 ; இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் . இவர் 1988 - 90 வரை இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார் . சந்திரசேகர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவர் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்தார் . இவருக்கு சொந்தமாக கிரிக்கெட் பயிற்சி பள்ளி உள்ளது . டி . என் . பி . எல் . கிரிக்கெட் போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்தார் . மேலும் ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸில் தோனி இடம் பெற காரணமாக இருந்தவர் இவர்தான் என குறிப்பிடத்தக்கது நேற்று இரவு தன் வீட்டில் சந்திரசேகர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . தகவ லறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாப்பூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத . பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பினர் . சந்திரசேகர் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர் . இவருக்கு மனைவியும் , இரண்டு மகள்களும் - உள்ளனர். டிஎன்பிஎல் எதில் இவரது அணியான விபி காஞ்சி வீரன் பிளே ஆப் சுற்று வரைக்கும் தகுதி பெற்று பின் அணியில் இருந்து வெளியேறியது மேலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்ததாகவும் இதனால் இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன இவரது தற்கொலை கிரிக்கெட் ரசிகர்களிடையே மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad