திருச்சி , மாவட்ட ஆட்சியரியிடம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழக பொது செயலாளர் எஸ். ஷாஜகான் கோரிக்கை மனு
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் தென்னூர் 49வது வார்டு பொதுமக்களின் நலனை கருதி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழக மாநில பொதுச் செயலாளர் எஸ் . ஷாஜஹான் கோரிக்கை மனு அளித்துள்ளார் .
இது குறித்து அவர் கொடுக்கபட்ட மனுவில் கூறிய தாவது.
திருச்சி மாவட்டம் தென்னூர் பகுதியில் உள்ள 49 வார்டில் சுமார் 20,000 பேர் வசித்து வருகின்றனர் இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் சரிவர கிடைப்பதில்லை மேலும் இப்பகுதி மக்கள் அவசர சிகிச்சை, குழந்தை நலச் சிகிச்சை, பேரு கால சிகிச்சை உட்பட அனைத்து வகை சிகிச்சைகளுக்கும் 5 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது எனவே பொது மக்கள் நலன் கருதி அப்பகுதியில் அரசு சிறப்பு மருத்துவமனை அமைத்து தர வேண்டுகிறேன்.
இவ்வாறு இவ்மனுவில் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் மாநில ஒருங்கினைப்பாளர் முஹம்மது பஹ்ருல்லா ஷா, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை