• சற்று முன்

    புதுக்‌கோட்டை நேரு யுவகேந்திரா அமைப்பானது தூய்மை பாரதம் 2.0 என்னும் நிகழ்வினை சிறப்பாக நடத்தியது


    இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் புதுக்‌கோட்டை நேரு யுவகேந்திரா அமைப்பானது தூய்மை பாரதம் 2.0 என்னும் நிகழ்வினை மாவட்டம் முழுவதும் இணைக்கப்பட்டுள்ள இளைஞர் மன்றங்கள் மற்றும் மகளிர் மன்றங்கள் மூலமாக செயல்படுத்தி வருகிறது. 

    இதன் ஒரு நிகழ்வாக இலுப்பூர் விளாப்பட்டியில் செயல்பட்டு வரும் தாய் உள்ளம் இளைஞர் நற்பணி மன்றமானது பல்வேறு செயல்பாடுகளை செய்து வந்தது. அதிலும் குறிப்பாக, மரக்கன்றுகள் நடுதல்,வரத்து வாய்க்கால்களை சுத்தம் செய்தல், திடக்கழிவு மேலாண்மை பிரிவினில் பணியாற்றுதல், கைகழுவும் நிகழ்ச்சிகள், தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்றல், சைக்கிள் பேரணி நடத்துதல், பேச்சு போட்டி,கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகள் நடத்துதல், விழிப்புணர்வு குறும்படங்கள் நடத்துதல், துண்டு பிரசுரங்கள் வழங்குதல்  மற்றும் தூய்மை இந்தியா கையெழுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி என பத்திற்கும் மேற்பட்ட சுகாதாரம் சம்பந்தப்பட்ட பணிகளில் செயலாற்றினார்கள். தூய்மை இந்தியா 2.0 திட்டத்தில் 50 மணிநேர களப்பணியில் ஒவ்வொரு திட்ட பணிகளிலும் இரண்டு மணிநேரம் என மன்ற உறுபினர்களான கருப்பையா, தங்கவேல், அழகர்சாமி, கார்த்திகேயன், மூர்த்தி, ஆதவன் ஆகியோர் செயலாற்றினார்கள். அனைத்து பணிகளையும்  மன்ற தலைவர் சரவணக்குமார் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தி முடித்தார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad