வேலூரில் தேங்கியிருந்த மழை நீரில் முழுகி இரு குழந்தைகள் பலி
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் கடந்த 3 தினங்களாக அதிக கனமழை பெய்தது. இதில் ஒடுக்கத்தூர் அடுத்த கே.ஜி.ஏரியூர் கொல்லைமேடு பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி வேலு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சாண எருவு கொட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் இரண்டு நாட்களாக பெய்து கனமழையின் தேங்கிய மழை நீரில் மூழ்கி அவரது 2 குழந்தைகள் பிரித்திகா (3), ஹரினி(6) பரிதாமாக உயிரிழந்தன.. அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர் இந்நிலையில் உயிரிழந்த சிறுமிகளின் இறப்பை அறிந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர் சிறுமியை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதாக கூறி சென்றார் மழைநீரில் மூழ்கி பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது
செய்தியாளர் : ராஜா ஈஸ்வரன்
கருத்துகள் இல்லை