• சற்று முன்

    அரக்கோணம் நகர காவல் நிலையம் முன்பு ஆந்திர மாநில பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி.....


    வேலூர் மாவட்டம் அரக்கோணம் செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சார்ந்த நாக மல்லேஸ்வரி என்ற பெண்ணிடம் தொழில் செய்ய அதிக பணம் தருவதாக கூறி ஏமாற்றி பெண்ணிடம் 14 லட்சம் பெற்று மோசடி  செய்தது தொடர்பாக நகர காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆந்திர மாநில பெண் நகர காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம் சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சிவா மற்றும் நாகா மல்லேஸ்வரி என்பவர்கள் ஓட்டல் வைத்து தொழில் நடத்தி வருகிறார்கள் ஓட்டல் புதுப்பித்து தொழில் செய்வதற்காக வங்கிகளை அணுகியபோது அரக்கோணத்தை சேர்ந்த ஆனந்த் என்பவர் பெண்ணை தொடர்பு கொண்டு தங்களுக்கு குறைந்த வட்டியில் தொழில் செய்ய அதிக முதலீடு தருவதாக ஆசை வார்த்தை கூறி ஆந்திர மாநிலத்திற்கு சென்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு மேலும் ஒரு நபரை சிங்கப்பூரில் இருப்பவர் பணத்தை தருவதாக கூறி முன்பணமாக தங்களுக்கு 20 லட்ச ரூபாய் கொடுக்கும் பட்சத்தில் பெண்ணிற்கு இரண்டு கோடி ரூபாய் வரை பணம் தருவதாக கொடுத்த வாக்குறுதியை நம்பி அந்தப் பெண் தன்னுடைய வீட்டை அடமானம் செய்து ரூபாய் 14 லட்சத்தை அரக்கோணத்தை சேர்ந்த ஆனந்தன் இடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    பணத்தைப் பெற்றுக் கொண்ட ஆனந்தன் ஆந்திர பெண்ணை ஐந்து ஆண்டுகளாக ஏமாற்றி வந்த நிலையில் ஏமாற்றிய நபர் ஒரு லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்து மீதம் பின்னர் தருவதாக அடமான பத்திரம் எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மீதமுள்ள பணத்தை ஏமாற்றி வந்த மோசடி கும்பல் நான் நகர காவல் நிலையத்தில் வைத்து பெண் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்காத நகர காவல் நிலையத்தை கண்டித்தும் மோசடி கும்பலை கண்டித்தும் நாக மல்லேஸ்வரி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

    தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பெண்ணை அருகில் இருந்த பெண் காவலர்கள் தடுத்து நிறுத்தி காவல்நிலையத்தில் வைத்து பெண்ணிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad