Header Ads

  • சற்று முன்

    நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் புகார்.


    ராணிப்பேட்டையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் புகார். 

    வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா நிதியுதவி நடுநிலைப்பள்ளியின் நிர்வாகி, ஆசிரியர், தலைமை ஆசிரியர் என 3 பொறுப்புகளை வகிக்கும் ஜெய்ஸ்ரீ கோதை என்பவர் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர் என்றும் அதேபோல் கடந்த 2014-2015 ஆண்டுகளில் மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட சுமார் 224009 ரூபாய் நிதி உதவியை (ஸ்காலர்சிப்) மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வில்லை என குற்றம் சாட்டி ராணிப்பேட்டை வட்டார கல்வி அலுவலர் சந்திராவிடம் புகார் மனு அளித்தும் அவர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அங்கு பயிலும் மாணவர்கள் பெரிதும் பிதிக்கப்பட்டு வருவதால் அப்பள்ளியின் நிர்வாகி ஜெயஸ்ரீ கோதை மற்றும் வட்டார கல்வி அலுவலர் சந்திரா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதர்க்கு பின்னும் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad