Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலையில் குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டதில் ஈடுபட்டனர்.


    மழைநீரை பாதுகாக்கும் விதமாக செயல்படுத்தப்படும் திட்டமான ஜல்சக்தி அபியான் திட்டம், ஊழல் சீர்கேடுகளுடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து, குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது, குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து, வெளியே வந்த விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் கூறியபோது, தேசிய அளவில் மழைநீர் சேமிப்பை வலுப்படுத்த, ஜல்சக்தி அபியான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக மழை நீரை பாதுகாக்க செய்யப்பட்ட திட்டங்கள் பலனளிக்கவில்லை தோல்வியடைந்து விட்டது. ஜல்சக்தி அபியான் திட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகளுக்கு, செலவாகும் தொகையை விட, பலமடங்கு அதிகமாக பில் போடப்பட்டு பணம் முறைகேடாக எடுக்கப்படுகிறது. அதிக அளவிலான ஊழல் நடைபெறுகிறது. ஜல்சக்தி அபியான் திட்டம், ஊழல் திட்டமாக மாறிப்போனது என்று குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad