திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கத்தில் குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கும் தேசிய நெடுஞ்சாலை அலட்சியம் காட்டும் அதிகாரிகள் !
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் சென்ற மாதம் நெடுஞ்சாலை துறை சார்பாக பேரூராட்சி ஊழியர்கள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வந்த நிலையில் பல வருடங்களாக கால்வாயை சுத்தம் செய்யப்படாததால் இதை பயன்படுத்தி செங்கம் பேரூராட்சி ஊழியர்கள் கால்வாயை சுத்தம் செய்து வந்தனர், அதன் கழிவுகளை கொண்டு வந்து செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் S.V. மஹால் எதிரில், இரவு நேரங்களில் கொட்டிவிட்டு செல்வதால் அந்த இடம் தற்போது குப்பைக் கிடங்கு பொருள் காட்சியளிக்கிறது, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின்படி செங்கம் செய்யார் சீரமைப்பு சார்பாக செங்கம் வரததாங்கல் ஏரியை சுத்தம் செய்த பணியில் ஈடுபட்டு முடியும் தருவாயில், தேசிய நெடுஞ்சாலை அருகில் செங்கம் பேராட்சி சார்பாக இரவு நேரங்களில் கால்வாயில் உள்ள கழிவுகளை கொண்டு வந்து தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் இங்கு துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் .அவ்வழியே கடந்து செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் துர்நாற்றத்துடன் இந்த பாதையை கடந்து செல்கின்றனர். இதை அறிந்தசெங்கம் செய்யாறு சேர் அமைப்பு குழுவினர் செங்கம் பேரூராட்சிக்கு சென்று முறையிட்டு இதனை சுத்தம் செய்ய கேட்டுக் கொண்டனர், ஆனால் இதை சுத்தம் செய்ய வேண்டிய செங்கம் பேரூராட்சி ஊழியர்கள் இதை கண்டுகொள்ளவில்லை. இதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த பேரூராட்சி ஊழியருக்கு உத்தரவிட வேண்டும் என இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது
கருத்துகள் இல்லை